புகைப்பட கலைஞர்களினால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

Untitled
Untitled

ஜனாதிபதியின் தாய்நாட்டை சுத்தப்படுத்துவோம் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட புகைப்பட கலைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் வளாகத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு வவுனியா மாவட்ட புகைப்பட கலைஞர் சங்கத்தின் செயலாளர் பொன்.சின்னப்பு சுபாஸ்சிங்கம் தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வவுனியா பொது சுகாதாரப் பரிசோதகர் கெ.சிவரஞ்சன் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட புகைப்பட கலைஞர் சங்கத்தினரால் நகரப் பகுதியில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் புகைப்பட கலைஞர்களின் மக்கள் சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை டெங்கு நோயின் காரணமாக வவுனியாவில் கடந்த வருடம் 750 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.