புதிய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது

maithiri
maithiri

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.