இந்திய தூதுவர் பிரதமர் ரணிலுடன் சந்திப்பு

1652427141 ranil pakle 2
1652427141 ranil pakle 2

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்துள்ளார்.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது வாழ்த்துக்களை தெரிவித்தாரென கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ருவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் சகல மக்களினதும் நல்வாழ்வை நோக்கிய ஜனநாயக செயற்பாடுகள் ஊடாக பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிஸுகோஸி ஹிடெய்கி, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்