முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்று!

mullivaikkal 850x460 acf cropped
mullivaikkal 850x460 acf cropped

ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாந்தம் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றை தினமும் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேநேரம், இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி என்ற தொனிப்பொருளில் பொத்துவில்லிலும், பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவணிகள் இன்று முள்ளிவாய்க்காலை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அறிவித்துள்ளது.