திருகோணமலை மக்களிற்கு மரக்கன்றுகள் விநியோகம்

Screenshot 20200104 142102 VidMate
Screenshot 20200104 142102 VidMate

தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைவாக திருகோணமலை மக்களிற்கு 600 தேக்கு மற்றும் கொய்யா மரக்கன்றுகள் இன்று வழங்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வளம் பெறும் நாட்டிற்கு பலன் தரும் மரங்கள் தேசிய வேலை திட்டத்திற்கு அமைவாக இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

திருகோணமலை இலுப்பை குளம் மற்றும் சிறுபிட்டிகுளம் பகுதியை சேர்ந்த மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க இலுப்பை குளம் கிராம சேவையாளர் ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் சமூக அபிவிருத்தி கட்சியினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இலுப்பை குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மானிய முறையிலான சுயதொழில் கடன் திட்டம், பெண்கள் அபிவிருத்தி தொடர்பான திட்டம், சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக மக்கள் பெற்று கொள்ளகூடிய அடிப்படை சேவைகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது.

அத்துடன் இத்திட்டங்கள் தொடர்பிலான விண்ணப்ப படிவங்கள் கிராம உத்தியோகஸ்தர் ஊடாக மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக அபிவிருத்தி கட்சியின் செயலாளர் பிரகாஸ் மற்றும் சமூக அபிவிருத்தி கட்சியினுடைய பிரதிநிதிகள் கிராம உத்தியோகஸ்தர்கள் கிராம தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்