எரிவாயு கப்பல் வருகையில் தாமதம் – லிட்ரோ அறிவிப்பு

dreamstime m 97448384 2400
dreamstime m 97448384 2400

இன்றைய தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மேலும் இரண்டு நாட்களாகும்.

எனவே, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாணய கடிதத்தை திறக்க கூடியதாக இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல், தமது எரிவாயு கொள்கலன் விநியோகத்தினை லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது