அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு இல்லை – பிரதமர்

ranil 1 1
ranil 1 1

ஊடக செய்திகளுக்கு அமைய, அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கவில்லை என, பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் இடைக்கால பாதீட்டு திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் அதிகரிக்க்கப்பட உள்ளதாக, ஊடகங்களிலும், சமூக வலைத்தங்களிலும் செய்திகள் பரவிவருகின்றன.

இந்த நிலையில், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.