வீடு புகுந்து பெற்றோல் மற்றும் வண்டி திருடும் கும்பல்!

1657184264 jaffna 2
1657184264 jaffna 2

யாழில் வீடு புகுந்த திருட்டுக் கும்பல் ஒன்று பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (06) புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே, மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது, வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலையும் திருடிக்கொண்டு செல்வதனை அவதானித்துள்ளனர்