கண்ணீர்ப்புகை குண்டுகளை திருடிய சந்தேகநபர் கைது!

kaithu
kaithu

போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகளை திருடிய சந்தேக நபர் ஒருவர் கண்ணீர் புகை குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி புதன்கிழமை வெலிக்கடை – பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை பொது ஒழுங்கு முகாமைத்துவ பிரிவுக்குட்பட்ட முச்சக்கரவண்டியில் இருந்து இந்த சந்தேக நபர் கண்ணீர் புகைக்குண்டுகளை கொள்ளையிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர் பெலிவத்த – கொட்டேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.