யுக்ரைனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் பலி!

images 1
images 1

ரஷ்யாவினால் யுக்ரைன் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

26 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட யுக்ரைனின் தென் கெர்சன் நகரத்தை மீள கைப்பற்றுவதற்கான முயற்சியில் யுக்ரைன் ஈடுபட்ட போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், யுக்ரைன் – பக்முட் பகுதியில் ரஷ்யாவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

15 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் யுக்ரைனின் தெற்கு மற்றும் வடக்கு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.