கோப் – கோபா தலைவர் பதவிகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு?

Parliament
Parliament

 9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியனவற்றுக்கான தலைவர் பதவிகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கோப் குழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரட்ணவின் பெயரும், கோபா குழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிமின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்கள் நாடாளுமன்றத்தின் முக்கிய இரண்டு குழுக்களாகும். அவை பொது நிறுவனங்களின் ஊழல், முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி பரிந்துரைகளை வழங்குகின்றன.

நாடாளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, முன்னதாக இருந்த கோப் மற்றும் கோபா குழுக்கள் கலைந்தன.