சுயாதீன கட்சிகளினது கூட்டமைப்பின் தலைவராக விமல்!

vimal weeravansa 1
vimal weeravansa 1

சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியில் 8 சுயாதீன கட்சிகள் ஒன்றிணையும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.