சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்!

f7d3a226 845a02ae sapugaskanda oil refinery 850x460 acf cropped
f7d3a226 845a02ae sapugaskanda oil refinery 850x460 acf cropped

இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் பற்றாக்குறையால் நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (16) முதல் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது.

90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றி வந்த மெர்பர்ன் என்ற கப்பலானது அண்மையில் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருந்ததுடன், இறக்குமதி பணிகள் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பெற்றோலிய சட்டபூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று , மேலும் 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தேவையான கொள்வனவு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இதன்படி, மீண்டும் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் முழு வீச்சில் இடம்பெற்று வருவதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனூடாக நாளொன்றுக்கு 1,600 மெற்றிக் தொன் டீசல், 550 மெற்றிக் தொன் பெற்றோல், 950 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கான எரிபொருளை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.