வவுனியாவில் பொதுஜன பெரமுன வேட்புமனு தாக்கல்

IMG 20230120 091720
IMG 20230120 091720

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பொதுஜன பெரமுன இன்று (20) வேட்புமனுவை தாக்கல் செய்தது.

IMG 20230119 132348


கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே . காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.


வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை , வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.