நேபாள வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

23 63d9733716a80
23 63d9733716a80

நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வருகிறார்.

கொழும்பில் நடைபெறும் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் இலங்கை வருகிறார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நேபாள வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

நாளைய தினம் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார விழாவில் அவர் பங்கேற்கிறார்.

காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நேபாள வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளார்.

இதன் பின்னர் அவர் பெப்ரவரி 5ஆம் திகதியன்று மீள நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.