கொழும்பில் வாகனம் செலுத்துவோருக்கு முக்கிய அறிவித்தல்

1675230656 1675226508 Police L
1675230656 1675226508 Police L

சுதந்திர தின ஒத்திகை மற்றும் சுதந்திர கொண்டாட்டத்தின்போது காலி முகத்திடல் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக ஒத்திகை நடைபெறும் பெப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் காலையிலும், சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதிகளிலும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்த முடியும் எனவும், வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாரதிகளால் பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.