நாளை விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம்!

PARLIAMENT 3
PARLIAMENT 3

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

புதிய அமர்வு பெப்ரவரி 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என இது தொடர்பான விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.