நாட்டின் சில பாகங்களில் இன்றிரவு மழை!

rain
rain

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை மாவட்டத்திலும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.