தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வீதிநாடகம் ஒன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று (02) காலை இடம்பெற்றது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பான முழுமையான உள்ளடக்கங்கள் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அது தொடர்பான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிற்கு விநியோகிக்கப்பட்டது.