வவுனியாவில் எரிபொருளை பெற்றுகொள்ள நீண்ட வரிசை

IMG 20230601 11532235
IMG 20230601 11532235

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.


அத்தோடு நகர மத்தியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்கின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.


எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல்  குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது