ஷெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

Untitled 81
Untitled 81

ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்தல்,
சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில்
ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துடன் இலங்கை கையெழுத்திட்டது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி
செயலகத்தில் வியாழக்கிழமை (08) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கடந்த மே 22 ஆம் திகதியன்று முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்குடனும்
இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது