ஆலயத்திற்கு சென்ற இளைஞர் பலி

image 808ce23b52
image 808ce23b52

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி  உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி  அம்மன்  ஆலயத்திற்கு சென்று விட்டு  வடமராட்சி கிழக்கு  குடத்தனை பகுதியில் உள்ள  தனது வீடு நோக்கி  பயணித்த இளைஞரே  மின் கம்பத்துடன் மோதி  உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்  இன்று அதிகாலை  3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக   பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.