இலங்கையின் சாலை வரைபடம் மாத இறுதியில் வெளியிடப்படும்

 சாலை வரைபடம் தூரம்
சாலை வரைபடம் தூரம்

இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட சலை வரைபடம் இம் மாத இறுதியில் வெளியிடப்படும்.

இது குறித்து இலங்கை நில அளவைத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட சாலை வரைபடத்தின் வடிவமைப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சாலை வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்களும் ஏனைய தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் சாலை வரைபடம் இறுதியாக 2014 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.