பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை!

ragging
ragging

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்து சிக்குபவர்களுக்கு 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும் பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார்.

அதற்கமைய பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

அதேவேளை பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்.

அரச ஊழியர்கள் சேவை துஷ்பிரயோகம் செய்தால் 48 மணி நேரம் பணிநீக்கம் செய்யப்படுவார்.குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழிய சிறை தண்டனை.

ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1 சதவிகிதத்திற்கு குறைவான வாக்குகளை பெறுவாராயின் 1கோடி ரூபாய் தண்டப்பணம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.