இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு ஜப்பான் உதவி!

japan srilanka
japan srilanka

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு இலங்கைக்கு சுமார் ரூ .1.6 பில்லியன் வழங்கியுள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் கீழ் இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை காவல்துறை மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ஆகியவற்றின் திறனை வலுப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் டாக்டர் RHS.சமரதுங்கா மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகிரா சுகியாமா ஆகியோர் கையெழுத்திட்டனர்.