தேவையற்ற கைது இல்லை – கெஹலிய

14 011 1
14 011 1

முதலீட்டு ராஜாங்க அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது ஏனையோரில் எவராவது அநீதியான முறையில் கைது செய்யப்பட்டிருப்பாராயின் மனித உரிமை மீறல் அல்லது ஏனைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

வத்தேகமவில் நடைபெற்ற பொது கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த வியடத்தை குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு புகழிடமளிக்கும் சட்டம் நாட்டுக்கு தேவையான ஒன்று அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றதைப் போன்று தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் செயற்படாது குறிப்பிட்டார்.