எதிர்கால தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

20200106 200826
20200106 200826

இவ்வாண்டு நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவ்வாறு பயணிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (6) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவர் கலீல் முஸ்தபா தலைமையில் மருதமுனை பணிமனையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில் கலந்து கொண்டார்.

அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக் கொண்டது. இருந்தாலும் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் எவ்வாறாவது எமது கட்சியை பலப்படுத்தி திட்டமிட்ட அடிப்படையில் ஆசனங்களைப் பெற வேண்டும்.

பெரும்பான்மை கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது தொடர்பில் பல முறை சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது.

இதன் போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்ததுடன் இறுதியாக இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதன் மூலமே ஒரு ஆசனத்தையாவது பெற முடியும் என புள்ளிக்கணிப்பிட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது” என தெரிவித்தார்.