வெள்ளிக்கிழமை ஆண்டின் முதல் சந்திரகிரகணம்!

chandran
chandran

2020 ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் நாள் தோன்றவுள்ளது.

இலங்கை நேரப்படி 10.37 இற்கு தொடங்கி, அதிகாலை 2.42 மணிக்கு நிறைவடையும்.

இந்த நேரத்தில் சந்திரனின் நிழல் இலகுவான நிலையிலேயே பூமிக்குள் நுழையும்.

2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10 ஆம் திகதி தெரியும். நாசாவின் சந்திர கிரகண விளக்கப்படத்தின் படி, மொத்த நிகழ்வு சுமார் நான்கு மணி நேரம் தெரியும்.

இது “ஓநாய் சந்திர கிரகணம்” (“Wolf Moon Eclipse”) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த 2020ஆம் ஆண்டில் முதலில் வருகின்ற சந்திர கிரகணம் இது என்றாலும், இன்னும் இதே ஆண்டில் மேலும் மூன்று சந்திர கிரகணங்கள் தோன்ற இருக்கின்றன.

ஜூன் 5, 2020 – இது நிழல் போன்ற கிரகணமாகத் தான் இருக்கும். தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.

ஜூலை 5, 2020 – இதுவும் நிழல் போன்ற தெளிவற்ற கிரகணமாகவே இருக்கும். இதை வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பார்க்க முடியும்.

நவம்பர் 30, 2020 – இந்த கிரகணமானது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் தோன்றும்.