அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் பொலிஸ் நிலையம்

officePic withCars500
officePic withCars500

பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் நிலையம், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

பாரிஸ் 2ஆம் வட்டாரத்தின் டேட் ரூ டு குரோசண்ட் வீதியில், அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் நிலையமே இவ்வாறு அடைக்கலம் கொடுத்துள்ளது.

குளிர்காலத்தில் அகதிகள் வீதிகளில் உறங்குவதனை தடுக்கவும், அவர்களை பாதுகாப்பதற்காகவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ட்ரோய்ட் யு லோஜ்மெண்ட் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இங்கு தற்போது சுமார் நாற்பது அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் வீடற்ற 445 பேர் வீதிகளில் இறந்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.