மன்னாரில் தொடர்ச்சியான மண் அகழ்வு – மக்கள் பாதிப்பு

Untitled
Untitled

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெறுகின்ற போதும் உரிய அதிகாரிகள் இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாதீக்கப்பட்ட கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் உள்ள அருவியாறு , கூராய் , பாலியாறு போன்ற பகுதிகளிலும் அளவு கணக்கில்லாதவாறு டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்களில் மண் ஏற்றப்படுகின்றன.

நானாட்டான் அருவியாற்றங்கரையில் மீன் வளர்ப்பிற்கு அனுமதி எடுத்து மணல் வியாபாரங்கள் நடை பெறுவதாக  மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

அத்துடன் பெக்கோ இயந்திரங்கள் மூலமும்  நீர் ஊற்று வெளி வரும்  வரையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த விடையம் தொடர்பாக   மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,
கனரக வாகனங்களின் அளவுக்கு அதிகமான போக்கு வரத்துகளால்  வீதிகள் சேதமடைந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஓடைகளை குடைந்து அகழிகளாக தோண்டிச் செல்வதால் சாதாரண வெள்ளம் வந்தாலும் குடி மனைகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த வருடம்  மன்னார் மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள்  வந்து பார்வையிட்டு மண் அகழ்விற்கு தடை செய்யப்பட்ட பகுதி என தெரிவிக்கப்பட்டது.

எனினும் மீண்டும் அவ்விடத்தில் மணல் அகழ்வு நடை பெற்து வருகின்றது குறிப்பிடதக்கது.