மன்னாரில் மத நல்லிணக்க கூட்டம்

IMG 5469
IMG 5469

மத ரீதியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வமத குழு பிரதிநிதிகளை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச சர்வமத குழுக் கூட்டம் இன்றைய(செவ்வாய்கிழமை)நாள் இடம்பெற்றது.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் அதன்  பிராந்திய இணைப்பாளர் எம்.யூ.எம் உவைஸ் தலைமையில், தொடர்பாடலுக்கான மையத்தின் அலுவலர் திரு.ஜோண்சண் ஒழுங்கமைப்பில் காலை 10 மணியளவில்  இடம்பெற்றது 

பன்மைத்துவம் மற்றும் நீதியின் ஆதிக்கம் ஆகியவற்றை பலப்படுத்துவதன் மூலம் சமயத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் மாவட்ட ரீதியில் காணப்படுகின்ற மத ரீதியான பிரச்சினைகளை அடையாளம் கண்டு புரிந்துணர்வு மூலம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 

குறித்த நிகழ்வுக்கு சர்வ மதத் தலைவர்கள் உட்பட அரச அலுவலர்கள், கிராம அலுவலர்கள், சமூக பொலிஸ் உத்தியோகஸ்த்கர்கள், ஊடகவியளாலர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட  பலரும் கலந்து கொண்டனர். 

அண்மைகலமாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் மத ரீதியான முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெறாமல் பாதுகாப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

குறித்த மன்னார் பிரதேச சர்வமத குழுவானது இம் மாதம் 20,21,22 திகதிகளில் பேருவெல சர்வமத குழுவினருடன்  நல்லிணக்க விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.