மறவன்புலவு காற்றாலை குறித்து கலந்துரையிடல்

angajan
angajan

யாழ்ப்பாணம், மறவன்புலவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (7) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் , சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அரச அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், காற்றாலை அமைக்கும் நிறுவன அதிகாரிகள் மற்றும் மறவன்புலவு மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

காணி கொள்வனவு, காற்றாலை அமைவிடம், காற்றாலை ஒலி, காற்றாலை பராமரிப்பு மற்றும் விபத்துக்கள், காற்றாலையினால் ஏற்படும் பிற விளைவுகளுக்கு பொறுப்பு கூறல், சூழலிய மாற்றம், சமூக நிதி பயன்பாடு, வீதிகள் சேதமடைதலும் மீள் புனரமைத்தலும் மற்றும் திணைக்கள அனுமதிகள் என பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.