“சுதந்திர காஷ்மீர்” பதாகைக்கு பா.ஜ.க எதிர்ப்பு

kasmir
kasmir

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முன் தினம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் ஜே.என்.யூ.வில் நடப்பதாக தெரிவித்து இத்தாக்குதலுக்கு ஹிந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

மாணவர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மும்பையில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தில் ‘சுதந்திர காஷ்மீர்’ என்ற பதாகை காண்பிக்கப்பட்டது.

இதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“போராட்டத்தில் சுதந்திரமான காஷ்மீர் என்ற பதாகை தாங்கியது இந்தியாவிற்கும் காஷ்மீருக்கும் எதிரானது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்” என ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க தலைவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து மொபைல் மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டதை குறித்தே சுதந்திர காஷ்மீர் என்ற பதாகையை போராட்டக்காரர்கள் காட்டியதாக சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.