வெளிநாடுகளில் படிக்க விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!

uk
uk

பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியாவில் தங்குவதற்கும், புதிய குடியேற்றப் பாதையில் பணியாற்றுவதற்கும் இலங்கை மற்றும் பிற பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது என்று பிரித்தானிய ஆணையகம் தெரிவித்துள்ளது.

புதிய பட்டதாரி குடிவரவு பாதை 2020/2021 கல்வியாண்டிலிருந்து பொருந்தும் என்று பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

“வெளிநாடுகளில் படிக்க விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி” என்று கொழும்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கூறினார்.

இது அவர்களுக்கு இங்கிலாந்து கல்வியைக் கட்டியெழுப்புவதற்கான நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும் மேலும் வேலை செய்வதற்கும் வாழ்க்கை அனுபவத்தைப் பெறுவதற்கும் இது வாய்ப்பளிக்கும். இது பிரித்தானிய மற்றும் இலங்கைக்கு கிடைத்த வெற்றி.

அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி வழங்குநரிடம் இளங்கலை மட்டத்தில் அல்லது அதற்கு மேல் படிப்பை வெற்றிகரமாக முடித்த அனைத்து மாணவர்களுக்கும் இந்த பாதை கிடைக்கும்.