பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் அம்பாறை விஜயம்!

 தேரர்
தேரர்

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

அம்பாறை பொத்துவில் கரையோரப் பிரதேசத்தில் இலங்கை அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரை மற்றும் அதனை அண்மித்து காணப்படுகின்ற புராதன சின்னங்களை சுயாதீனமாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் பார்வையிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அம்பாறைக்குச் சென்ற தேரர்

”72 ஏக்கர் காணி பௌத்த விகாரைக்காக அடையாளம் காணப்பட்டிருந்தது என்றும் ஆனால் தற்போது 14 ஏக்கர் காணி மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் இது பௌத்த பூமி என்று கூறிய அத்துரலியே ரத்ன தேரர், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பௌத்த சமயத்தைப் புறக்கணித்துள்ளது”

என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.