மன்னார் பிரதேச சபையின் கணக்கு அறிக்கை நிராகரிப்பு

IMG 5647
IMG 5647

மன்னார் பிரதேச சபையின்  2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவு கணக்கு அறிக்கையானது எதிர்ப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையினுடைய 2020 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டமும் சபையினுடைய 22 ஆவது அமர்வும் இன்றைய தினம்(09) வியாழக்கிழமை மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாஹிர் தலைமையில் மன்னார் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் கணக்கறிக்கை சபை அங்கத்தவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையானது அதிகமான பிரதிநிதிகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.