கடந்த அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனமாக செயற்படவில்லை – பிரதமர்

mahinda rajapaksha
mahinda rajapaksha

தற்போது வெளிவரும் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளின் மூலம் கடந்த அரசாங்கத்தில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படவில்லை என்பது புலப்படுவதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நீதிமன்ற தீர்ப்புக்களை எவ்வாறு நம்புவது? ஆகவே நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

அத்துடன் தற்போது காணப்படுகின்ற தேர்தல் முறைமையின் மூலமாக எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

அரிசி விலையேற்றத்தில் அரசி மாபியாக்களின் செயற்பாடுகளே காரணம் எனவும், சுவிஸ் தூதர பெண் கடத்தலில் கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டவர்கள் தொடர்புபட்டுள்ளார்கள்” என இதன் போது தெரிவித்தார்.