ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று

moon
moon

இவ்வாண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று (10) நிகழவுள்ளது.

இன்று இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழவுள்ளது. இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை இலங்கையின் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

மேலும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது.

இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயர் சூட்டியுள்ளது. இதேபோல், இந்த ஆண்டில் 4 சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.