இந்திய கடன் திட்டத்தின் கீழ் புதிய பேருந்துகள் இறக்குமதி!

gov
gov

இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,

இந்திய கடன் உதவி நடைமுறையின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை போக்குவரத்து சபையினால் பொதுமக்களுக்கு செயல்திறன் மிக்க மற்றும் வசதிகளைக் கொண்ட நகர மற்றும் கிராமிய பிரதேசங்களில் உள்ள முக்கிய வீதிகளைப் போன்று கிராமிய பிரதேசத்தில் குறுக்கு பாதைகளில் பயன்படுத்தக் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்திய கடன் திட்ட முறையின் கீழ் இதற்கு முன்னர் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட பேருந்துகளுக்குப் பதிலாக மேலும் 100 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 30 – 35 புதிய 500 பேருந்துகள் மற்றும் விநியோகிக்கப்படும் உயரத்தைக் கொண்ட 42 – 45 ஆசனங்களைக் கொண்ட புதிய 100 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.