சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

110123 enc
110123 enc

காய்ச்சல், இருமல், தடிமன் என்பன சாதாரண நோய் அறிகுறி எனவும் புதிய வைரஸினால் ஏற்பட்ட அடையாளம் தெரியாத நோய் அல்ல என சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ப்ளுவென்சா நோய் பரவியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்று நோய்கள் குறித்து மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.