முகப்பவுடரை விரும்பி உண்ணும் அதிசய பெண்

addicted to EATING powder
addicted to EATING powder

இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரைச் சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). ஐந்து குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.

அதற்கமைய இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை அதிகமாக உட்கொண்டு வருகிறார்.

இதற்காக அவர் இதுவரை 8,000 பவுண் தொகையை செலவிட்டுள்ளார்.

லிசா ஆண்டர்சனுக்கு 5ஆவது குழந்தை பிறந்த பின்னரே அவருக்கு பவுடரை சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் ஜான்சன் என்ட் ஜான்சன் பவுடரை அவர் விரும்பி சாப்பிடுகிறார்.

இந்த பழக்கம் தொடங்கிய புதிதில் யாருக்கும் தெரியாமல் குளியலறைக்குள் சென்று இரகசியமாகவே பவுடரை சாப்பிட்டு வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் லிசா குடும்பத்தினருக்கே இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

ஆனால் போதைக்கு அடிமையானதுபோல், பவுடருக்கு அடிமையான அவரை அதில் இருந்து மீட்க தெரியாமல் அவரின் குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

மருத்துவர்களின் உதவியை நாடியபோது இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் இந்த நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறுகின்றனர்.

பவுடரை அளவுக்கு அதிகமாக சுவாசித்தாலோ, உண்டாலோ உடம்பிற்கு கெடுதல். புற்று நோய்கூட வர வாய்ப்புண்டு. ஆனால் லிசாவுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.