இலங்கைக்கு வருகை தந்த உலகின் பலம் வாய்ந்த நாடுகள் – ஓர் அரிய அரசியல் நிகழ்வு

Russia
Russia

உலகில் பலம்வாய்ந்த நான்கு முக்கிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஒரேநேரத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை ஒரு அரிய அரசியல் நிகழ்வாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வேன்ங் ஈ, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் மற்றும் ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ ஆகியோர் இவ்வாறு வருகை தந்த இலங்கை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

தனது பதவிக் காலத்தினுள் வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய பிரதிநிதிகள், இலங்கை ஆரம்பித்துள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகவுள்ள அனைத்து துறைகளிலும் துரித அபிவிருத்தியை அடைந்து நாட்டை முன்கொண்டு செல்லும் முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.