18 கிலோ கேரள கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

77321866 3b56 4681 908c 7843c1ad733f
77321866 3b56 4681 908c 7843c1ad733f

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 18 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மது வரித் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன் போது வீட்டிலிருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

அத்துடன் குறித்த வீட்டிருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உட்பட கைது செய்யப்பட்டவரை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.