10 சதவிகிதம் சோலை வரி அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்!

strike
strike

கிளிநொச்சி , கரைச்சி பிரதேச சபை அளவுக்கு அதிகமான 10% சோலைவரி அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரசாமி மகேந்திரன் என்பவரினால் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில்,

“கரைச்சி பிரதேச சபை, கிளிநொச்சி அளவுக்கு அதிகமான 10% சோலைவரி அறவிடுவதை எதிர்த்து கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்க்கங்கை ஹாட்வெயார் அன் வண்ணச்சோலையின் உரிமையாளராகிய குமாரசாமி மகேந்திரன் ஆகிய நான் கரைச்சி பிரதேச சபையின் வரி அறவீட்டினை எதிர்த்து எமது வர்த்தக நிறுவனம் முன்பாக எதிர்வரும் 23.01.2020 (வியாழக்கிழமை) காலை 9.00மணி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளேன்.

இதற்கு அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும், அரசியல் பிரமுகர்களும், பொது மக்களும் ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கரைச்சி பிரதேச சபை 4% சோலை வரியினைக் குறைக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடமாட்டேன் என்பதை அறியத்தருகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.