நெடுங்குளம் மக்களின் எதிர்ப்பினால் காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது!

03e5032a ef8b 4ed0 acc5 f46537742ad6
03e5032a ef8b 4ed0 acc5 f46537742ad6

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சவீகரிப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதனை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு யாழ் நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ் பிரதேச செயலாளர் சுதர்சன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

எனினும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பினை அடுத்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் திருப்பி அணுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதன் போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர்,

“பொது மக்களின் எதிப்புக்களால் இந்த அளவீடுகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்கப் போவதில்லை” என தெரிவித்தார்.