மட்டக்களப்பில் பரவி வருகின்ற ஒருவித வைரஸ் காய்ச்சல்!

fever
fever

மட்டக்களப்பில் பரவி வருகின்ற ஒருவித வைரஸ் காய்ச்சலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை காய்ச்சலின் காரணமாக பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கரையோரப் பிரதேசங்களிலும் இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக மக்களின் இயல்புநிலை பாதிப்படைந்துள்ளது.

இதற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. பனியுடன்கூடிய காலநிலையும் தொடர்கிறது. இதனால் இந்த தொற்றுக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே பாடசாலைக்குள் வருகை தரும் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவினர் புகை விசிறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.