பகிடிவதையினால் பாதிப்புற்ற மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்!

bandu
bandu

பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதைகளினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதற்கான அறிக்கையை மூன்று மாத காலப்பகுதிக்குள் வழங்குவதற்கான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூக், முன்னாள் உபவேந்தரான நாரத வர்ணசூரிய, பேராசிரியர் சங்கைக்குரிய மாகம்மன பஞ்ஞானந்த தேரர், கலாநிதி பெனட் சாந்த அடிகளார், கலாநிதி சந்திரா எம்புல்தெனிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ் ஆகியோர் அங்கத்தவர்களாகச் செயற்படவுள்ளனர்.

இதன் அமைப்பாளரும் செயலாளருமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் திருமதி ஜனிதா லியனகே செயற்படவுள்ளார்” என தெரிவித்தார்.