காதலிக்க மறுத்த 12 வயது மாணவி மீது கத்திக்குத்து!

violance
violance

காதலிக்க மறுத்த 12 வயது மாணவி மீது 14வயது மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

மஹியங்கனை கிராதுருகோட்டை பிரதேசத்தை சேர்ந்த மாணவி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கத்திக்குத்தினை மேற்கொண்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் வீட்டு பகுதிக்கு பல நாட்களாக கத்தியுடன் வந்து செல்லும் மாணவன் முகத்தை மறைத்த நிலையில் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கத்தியால் குத்திய மாணவனும், படுகாயமடைந்த மாணவியும் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.