நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி இராஜினாமா

jayampathy
jayampathy

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன ஜனவரி 20ஆம் திகதி முதல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜயம்பதி விக்ரமரட்ன தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு செயலாளர் நாயகம் உள்ளிட்ட நாடாளுமன்ற பணியாட் தொகுதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.