வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு புத்துயிர் அளிக்குமாறு கோரிக்கை!

6 2
6 2

வாழைச்சேனை கடதாசி கூட்டுத்தாபனத்தின் கைத்தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்குமாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி நலின் குணதிலக இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் தளத்தினூடாக,

“2012 ஏப்ரல் தொடக்கம் 2015 ஜனவரி 08ம் திகதி வரை மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் 100% அரசுடைமையான முன்னாள் தேசிய கடதாசி கூட்டுத்தாபனமான நஷனல் பேப்பர் கம்பெனி லிமிட்டெட் (ந.பே.க.லி.) ஒரு சாதகமான உற்பத்தி வளர்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருந்தது. இங்கு 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றினார்கள்.

இந்நிறுவனம் பெரும்பாலான அரச நிறுவனங்களின் கோவை அட்டைகள் மற்றும் போட்டோ கொப்பி பேப்பர் ஆகியவற்றின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்தது.

தற்போதும் கூட ஆயுட்கால உத்தரவாதம் கொண்ட இயந்திரங்களுடன் நிருமாணிக்கப்பட்டுள்ள இந்த காகித ஆலையை புனரமைப்பதற்கான சவால்களை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.